சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் போராட்ட விளக்கம் அளித்தார். அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர், வழிநடத்தும் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். நிதி காப்பாளர் சித்ரா உள்ளிட்டோர் தேர்வாகினர். ஆலோசகர்களாக சங்கரசுப்பிரமணியன், குமரேசன் தேர்வாகினர். அக்., 27 முதல் பிரசார இயக்கம் நடத்துவது, நவ., 26 அன்று மாவட்ட தலைநகரில் பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி ’விசில்’ அடிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் நன்றி கூறினார். ///

Advertisement