சண்முகம் ஆதரவாளர்கள் 2000 பேரை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கிய பழனிசாமி
சென்னை: அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை, கட்சியில் இருந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நீக்கி உள்ளார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், உட்கட்சி மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் தலைமையில், அதிருப்தி அணி செயல்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்குமாறு, வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சண்முகத்தின் ஆதரவாளர்களை குறிவைத்து, அவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து, பழனிசாமி நீக்கி வருகிறார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: சட்டரீதியான விஷயங்களில், பழனிசாமிக்கு பெரும் துணையாக இருந்தவர், சண்முகம். அவருக்கு பழனிசாமியின் பலவீனம் அனைத்தும் தெரியும். உட்கட்சி மோதலால், விழுப்புரம் மாவட்ட செயலர் பதவியில் இருந்து சண்முகத்தை நீக்கியபோதிலும், அந்த மாவட்டத்தில், பழனிசாமியால் எதுவுமே செய்ய முடியவில்லை.
சண்முகம் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், கட்சியை விட்டும் அவரை நீக்க முடியவில்லை. எனவே, சண்முகத்தை தனி மரமாக்க நினைத்து, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த, அவரது ஆதரவாளர்கள், 2000க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வேலுமணி ஆதரவாளர்கள் மீது பழனிசாமி கைவைக்கவில்லை.
சண்முகம் மீது பழனிசாமிக்கு தனிப்பட்ட கோபம் இருப்பதாக தெரிகிறது. இதற்கு துணை பொதுச்செயலர் முனுசாமியும் காரணம். ஏனென்றால், வன்னியர் சமுதாயத்துக்கு யார் தலைவர் என்ற பிரச்னை, முனுசாமிக்கும், சண்முகத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக இருக்கிறது. அதை பழனிசாமி வாயிலாக, முனுசாமி தீர்த்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிமுக போய் எதிமுக வந்துவிட்டது. தனியே தன்னந்தனியே எடப்பாடி.
digging the grave deeper
ஒரு நாள் மறதியால் தன்னையே நீக்கிவிடுவார். அம்மா கட்சிக்கு மங்களம்.
super
இவரும் அதிமுகவை அழிக்காமல் விட மாட்டார். ராகுல் போல் இவர் செயல்படுகிறார்
அதிமுக என்னும் நல்ல அமைப்பை எடப்பாடி தன் சுயனலத்திற்காக சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருக்கிறார்.மேலும்
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
கனமழையால் கூடப்பட்டு தடுப்பணை நிரம்பியது: 19 ஏரிகளுக்கு நீர் செல்ல வாய்ப்பு
-
'ராகுல் நடத்துவது அரசியல் போராட்டம் இல்லை: ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல்'
-
பள்ளி மாணவர்களுக்கு விற்க இருந்த 600 போதை மாத்திரைகள் பறிமுதல்
-
குழந்தை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை; கணவர், பெற்றோர் மீது வழக்கு
-
துபாய் பறந்தார் உதயநிதி பழைய வீடியோவை வெளியிட்டது தி.மு.க.,