இந்தியாவில் குழந்தைகள் இன்டர்நெட் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம்கோர்ட்
நமது சிறப்பு நிருபர்
உலகம் முழுதும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களை குழந்தைகளும் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இணைய பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு எப்படி என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சமூக ஊடகங்கள், இணையத்தை பயன்படுத்த வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் விசாரித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* குழந்தைகள் பாதுகாப்பு, இணையத்தை பயன்படுத்தும் சுதந்திரம் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கருத முடியாது. இணைய பயன்பாட்டை முழுதாக தடை செய்ய முடியாது. குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடக் கூடாது.
* வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள், குழந்தைகளை கட்டுப்பாடுகள் இல்லாத ஆபத்தான இணையதளங்களை நோக்கி தள்ளிவிடக் கூடும். இணையத்தில் பாலியல் துன்புறுத்தல் அல்லது மிரட்டல்களுக்கு ஆளாகும் குழந்தைகள், இணைய கட்டுப்பாட்டை மீறியதற்காக பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், அதை மறைத்துவிடும் அபாயம் இருக்கிறது.
* குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள், படங்கள், காணொளிகள் போன்ற உள்ளடக்கங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஒழுங்குமுறை அமைப்புகளும், சமூகவலைதள நிறுவனங்களும் குழந்தைகளை பாதுகாக்கும் விஷயத்தில் போதிய தீவிரத்துடன் செயல்படவில்லை என்பதையே இணையத்தில் பரவும் உள்ளடக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
* தற்போது ஒருவர் புகார் அளித்த பிறகே, இத்தகைய உள்ளடக்கங்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சமூகவலைதளம் புகாருக்கு உள்ளான உள்ளடக்கத்தை நீக்கும் வேளையில், அதே உள்ளடக்கம் மற்ற தளங்களிலும் தானாக கண்டறியப்பட்டு நீக்கும் முறை நடைமுறையில் இல்லை.
* அவற்றை இணையத்தில் இருந்து முழுதாக நீக்குவதில் தாமதம் ஏற்பட்டு, தொடர்ந்து பரவும் அபாயம் நிலவுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள், துன்புறுத்தல்கள் அடங்கிய உள்ளடக்கங்களை விரைந்து கண்டறிந்து நீக்குவதற்கான, தேசிய தரவுதளங்களை உருவாக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.
* ஒரே மாதிரியான உள்ளடக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக அடையாளம் காண உதவும், 'ஹேஷ்' குறியீடுகளும், அந்த உள்ளடக்கங்கள் இடம்பெறும் இணைய முகவரிகளும் இடம் பெற வேண்டும். ஒரு தளத்தில் கண்டறியப்பட்ட ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை, மற்ற தளங்களிலும் அடையாளம் கண்டு நீக்க முடியும்.
ஒரேயொரு புகாரின் அடிப்படையில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் தானாக நீக்கவோ, தரவுதளத்தில் சேர்க்கவோ கூடாது.
* தவறான புகார்களால், முறையான உள்ளடக்கங்கள் நீக்கப்படுவதை தடுக்க, பலகட்ட சரிபார்ப்புகள் அவசியம். தவறுதலாக இணைய முகவரி அல்லது, 'ஹேஷ்' குறியீடு குறிக்கப்பட்டால், அதை எதிர்த்து முறையிடுவதற்கான குறைதீர் நடைமுறையும் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கங்களை கண்டறிய உருவாக்கப்படும் இந்த தரவுதளங்களை, வேறு வகையான உள்ளடக்கங்களை நீக்குவதற்கு பயன்படுத்தக் கூடாது.
* குழந்தைகளுக்கு இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடக்க பள்ளி நிலையில் இருந்தே உருவாக்க வேண்டும். இணையத்தில் ஏற்படும் ஆபத்துகளை அடையாளம் காணவும், அச்சுறுதல்கள் ஏற்பட்டால், நம்பகமான பெரியவர்களிடம் அதை கொண்டு சென்று, உதவி கேட்பதற்கும் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், 'இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிச., 10க்குள் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.
நான் எப்போதும் சொல்வது, அநீதிமன்றம்.
Then the SC can very well scrap POCSO Act.
I expect this will happen sooner than later.
The credibility of Supreme court has been totally lost
நீதிமன்றம் எப்பவுமே தேவை இல்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்புகளை வாரிவழங்குறானுங்க... தேச நலன் கொண்ட எந்த விஷயத்திற்கும் தெளிவான தீர்ப்புகளை தரமாட்டானுங்க... நமது கலாச்சாரம் பண்பாடு சம்மந்த பட்ட விஷயங்களை இந்த தீர்ப்புகளை இருக்கும் கும்பலை கொண்டு எப்படி தீர்மானிப்பது? ஒரு அய்யோக்கிய நீதியை விற்கும்/விற்றவன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கட்டுகட்டான பணத்திற்கு இந்த அநியாயா வான்கள் ஏன் வாய் திறப்பதில்லை
14, 15 வயசு அடொலசன்ட் குழந்தைகள் இன்டர்நெட் மூலமா. பலான படங்கள் பார்த்து அது போல நடந்து பிரச்சனையானா, தண்டனை தாரீங்க. அதுக்கு, வருமுன் தடுக்கலாமே.
குழந்தைகளின் எதிர்காலத்தை கடவுளாலும் காப்பாற்றமுடியாது எனும்போது நீதிமன்றமே காப்பாற்றப்போகின்றது.
JUDGES ARE FROM RESERVATION, HOW COME THEY CAN JUDGE ABOUT THE CONSEQUENCES. IF JUDGES ARE THROUGH MERIT THEY SHOULD HAVE SCRAPED THE RESERVATION LONG BACK
முதல்ல உங்க வீட்டு போன்ல தேவையில்லாத ரீல்ஸ் வீடியோ சாட்டிங் செய்யுறத நிப்பாட்டுங்க..
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் ... நீதிபதிகளின் தீர்ப்பில் என்னைப்போல் சிந்திக்கும் பலருக்கும் உடன்பாடு கிடையாது.. இங்கு குழந்தைகள் குற்றங்கள் அதிகமாக நடைபெற இன்டர்நெட் ஒரு முக்கிய காரணம் .. பின் எதற்காக தடை கிடையாது...
அரசியல் சாசனத்தை ஓரம் கட்டிவிட்டு தங்க மனித ஒழுக்கம் சமூக பிரக்ஞையோடு தீர்ப்பு சொல்லவும்.