இடமிருந்தும் இருக்கை இல்லை விசிறி இருந்தும் காற்று இல்லை: சோழவந்தான் பதிவு அலுவலக அவலம்
சோழவந்தான்: ‘‘சோழவந்தான் சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு 'பஸ் ஸ்டாண்ட்' அருகே பழைய சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டது. ஓராண்டுக்கு முன் அகற்றப்பட்டு அதே இடத்தில் ரூ.பல லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதில் போதுமான இடமிருந்தும் குறைவான இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் காத்திருப்போருக்காக அமைத்த சிறிய தகர செட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளன.
பதிவு தாமதமானாலும், விசேஷ நாட்களில் அதிக கூட்டம் வரும்போதும் பதிவுக்கு வருவோர் படிக்கட்டுகளில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. தகர செட்டுக்குள் மின்விசிறிகள் செயல்படாததால், வெயில் நேரத்தில் அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்க முடியாத அளவுக்கு அனல் வீசும். இதனால் பதிவுதாரர்கள் வெப்பச் சலனத்திற்குள் சிக்கியது போல உணர்கின்றனர். பழைய அலுவலகத்தில் கடப்பா கற்களாலான பெஞ்ச், இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது பத்திர எழுத்தர்கள், பதிவு செய்ய வருவோருக்கு வசதியாக இருந்தது.
தற்போது ஆவணங்களை வைத்து கையெழுத்து வாங்கக்கூட இடமில்லாமல் நெருக்கடியாக உள்ளது. பலர் தரையில் அமர்ந்து பத்திரங்களை சரி பார்க்கின்றனர். அதிகாரிகள் திறந்த வெளிப்பகுதியிலும் பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’