நியூசிலாந்து முதலீட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்: பியூஷ் கோயல்
புதுடில்லி: இந்தியா -நியூசிலாந்து கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் 20 பில்லியன் டாலர் (ரூ.1.90 லட்சம் கோடி) முதலீட்டை எளிதாக்குவதற்கான நியூசிலாந்தின் உறுதிப்பாடு, இந்தியாவில் உள்கட்டமைப்பு, உற்பத்தி, சேவை மற்றும் புதுமை, மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, பெரிய சந்தையை அணுகும் வசதி கிடைக்கும். விவசாய ஒத்துழைப்பின் கீழ், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்துரைக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் எனக்கூறியுள்ளார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தால், விவசாயிகள், சிறுகுறு நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பெரிதும் பலன் பெறுவர். நாளை முதல் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லும் பொருட்களுக்கு வரி இல்லை எனக்கூறினார்.
நியூஸிலாந்தைபோல ஊழல், லஞ்சமற்ற ஒரு நேர்மையான நாடாக அமையவும் மக்கள் விரும்புகிறார்கள்.மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்