உணவு பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செ ல்வதில் அலட்சியம்: எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை
கோவை: மகாராஷ்டிராவை தொடர்ந்து, நாடு முழுதும், தரமற்ற, கலப்பட உணவு புகார்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்திலும் தற்போது சிறப்பு ஆய்வு நடக்கிறது. அப்போது, பல இடங்களில், பால், பன்னீர், இறைச்சி, மீன் உள்ளிட்ட எளிதில் அழுகக்கூடிய உணவு பொருட்கள், உரிய தட்பவெப்ப நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்பது தெரியவந்தது. மிக விரைவாக பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் பெருகி, உணவு கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எனவே, எளிதில் கெட்டுப்போகும் உணவு பொருட்களின் உற்பத்தியில் இருந்து, விநியோகம் வரையிலான நிலைகளில், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,(மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்_ சார்பில், வணிகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இப்பொருட்கள் எடுத்து செல்ல சுத்தமான, முழுமையாக மூடப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கொள்முதல் செய்வது முதல் வாடிக்கையாளரை சென்றடையும் வரை, விநியோக சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் பரிந்துரைக்கப்பட்ட, குறைந்த வெப்பநிலையை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
தரமான பேக்கிங் உறைகளையே பயன்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சணல் பைகளிலோ, சுகாதாரமற்ற சாக்குகளிலோ, இவற்றை அடைத்து கொண்டு செல்ல கூடாது.
துாசு, ஈரம் மற்றும் பூச்சிகளால் உணவுப்பொருட்கள் மாசடையாத வகையில் பாதுகாக்க வேண்டும்.
வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான உரிய ரசீதுகள், ஆவணங்களை அதிகாரிகள் சோதனையின்போது, உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, அனைத்து மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறையினர், தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது, வழக்கு பதிவு செய்வதோடு, தரமற்ற உணவுகள் உடனுக்குடன் பறிமுதல் செய்து அழிக்க வேண்டுமென, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்வாக இயக்குனர் டாக்டர் அமித் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்