விளையாட்டு போட்டி சேது ஐராணி பள்ளி வெற்றி

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் 5 விளையாட்டுக்களில் முதலிடத்தை கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வென்றனர்.

மாணவிகள் பிரிவில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடத்தையும், 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட கைப்பந்து போட்டியில் முதலிடத்தை மாணவிகள் பெற்றனர். மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட எறிபந்து போட்டியில் இரண்டாமிடம்,மூன்றாமிடம் மாணவிகள் வென்றனர். 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பீச் வாலிபால் போட்டியில் இரண்டாமிடத்தை வென்றனர்.

மாணவர்கள் பிரிவில் 17 வயதிற்குட்பட்ட ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்று பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றார். 19 வயதிற்குட்பட்ட பூப்பந்து போட்டியில் இரண்டாமிடத்தை வென்றனர்.மொத்தத்தில் பள்ளி மாணவ,மாணவியர் 5 முதலிடம், 4 இரண்டாமிடம்,1 மூன்றாமிடத்தை பெற்றதற்கு .பள்ளி தாளாளர் சேதுகுமணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் முதல்வர்,உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement