பழநி மலைக்கோவிலில் விஜயதசமி திருவிழா பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நவராத்திரி திருவிழா நிறைவு நாளான விஜயதசமி அன்று, சிறப்பு பூஜைகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதால், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேர கட்டுப்பாடுகளை, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வரும் 20-ம் தேதி விஜயதசமி திருநாளில், மலைக்கோவிலில் பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், அதை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் கோலாகலமாக நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து, பிற்பகல் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நிகழ்வு இடம்பெறும். பின்னர், சன்னதி திருக்காப்பிடப்பட்டு, வேல் கோதைமங்கலத்திற்கு சென்று அம்பு போட்டு விட்டு, மீண்டும் மலைக்கோவிலுக்கு திரும்பிய பின்னரே, ராக்கால பூஜை தொடங்கும்.
பூஜை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அன்றைய தினம் மலைக்கோவிலுக்கான அனைத்து வகையான கட்டணச்சீட்டு விற்பனையும், காலை 11:30 மணிக்கு முழுமையாக நிறுத்தப்படும்.
எனவே, விஜயதசமி தினமான வரும் 20-ம் தேதியன்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், காலை 11:00 மணி வரை மட்டுமே மலைக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அனைத்து பக்தர்களும் இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கோவில் வழிபாட்டு முறைகளை அறியாத செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கூடாது; அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
-
செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு
-
மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்
-
நாகர்கோவில், கொச்சுவேலி ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்
-
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை