மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக வீடுகள், வீட்டு வகை கணக்கெடுப்பு பணிகள் ஆக.,1 முதல் ஆக.,30 வரை நடந்தது. 14 வட்டாரங்களில் 3302 ஆசிரியர்கள், 575 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 3877 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். அவசர தேவைக்காக 338 ஆசிரியர்கள், 78 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 416 பேர் காத்திருப்பு பணியாளர்களாக வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணிகள், பயிற்சி முகாம்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அதற்கான உழைப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘ஆரம்ப கட்டத்தில் பணி ஒதுக்கீடு, மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் குழப்பங்கள், குளறுபடிகள் நடந்தது. இருப்பினும் அவற்றை சரி கட்டி முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். ஆனால் எங்களின் உழைப்புக்கான ஊதியத்தை இன்னமும் வழங்கவில்லை. குஜிலியம்பாறை வட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் தரவில்லை. எங்களது குடும்பச்சூழல், பொருளாதார நலன் கருதி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், ‘கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஒப்புதல், கணக்கு விவரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட அவசியமான பணிகள் உள்ளன. தற்போது நவராத்திரி பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தாமதப்படுகிறது. விரைவில் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும்’ என்றனர்.
மேலும்
-
கோவில் வழிபாட்டு முறைகளை அறியாத செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கூடாது; அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
-
செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு
-
மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்
-
நாகர்கோவில், கொச்சுவேலி ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்
-
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
-
கதவு திறந்து கிடந்த வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை