நாகர்கோவில், கொச்சுவேலி ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்
மதுரை: ஆயுதபூஜை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் வகையில் நாகர்கோவில், கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* கொச்சுவேலி – தாம்பரம்
அக்.20 இரவு 8:00 மணிக்கு கொச்சுவேலியில் (திருவனந்தபுரம் வடக்கு) இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06164), மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் அக்.21 மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06163), மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கொச்சுவேலி செல்கிறது. திருவனந்தபுரம் சென்ட்ரல், நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
* நாகர்கோவில் – சென்னை எழும்பூர்
அக்.20 இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ஒருவழி சிறப்பு ரயில் (06144), மறுநாள் காலை 9:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
மேலும்
-
கோவில் வழிபாட்டு முறைகளை அறியாத செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கூடாது; அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
-
செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு
-
மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்
-
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை
-
கதவு திறந்து கிடந்த வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை