ஜவகர் கல்லூரி பட்டமளிப்பு விழா
நெய்வேலி: நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரியின், 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் தேவி ஆண்டறிக்கை படித்தார். ஜவஹர் கல்வி குழும தலைவரான என்.எல்.சி.ஐ.எல்., சுரங்கத்துறை செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் வரவேற்றார். , கல்லூரி செயலரான பங்கஜ்குமார், ஜவகர் பள்ளி செயலரான ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.
கல்லாரியின் புரவலரான என்.எல்.சி.ஐ.எல்., மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், 693 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கியும், பல்கலை மற்றும் கல்லுாரி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது, திறன் மேம்பாடு, வாழ்நாள் தொடர்கற்றல் மற்றும், நன்னெறி பண்புகளை விளக்கியதோடு, மேலும், மாறிவரும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி நாடு வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
சிவகங்கை மருத்துவமனையில் தீயணைப்பான்கள் மாயம்
-
கடம்பத்துார் நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் கடை மரங்களின் நிழலை மதுக்கூடமாக்கிய ‘குடி’மகன்கள்: அச்சத்தில் பெண்கள், வாகன ஓட்டிகள்
-
வட மஞ்சுவிரட்டு
-
உயர்கோபுர மின்விளக்கு பழுது இருளில் மூழ்கிய தண்டலம் சாலை
-
நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
தனியார் வேலைவாய்ப்பு முகாம்