தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 24ம் தேதி தனியார் துறை வேலைவாயப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், வரும் 24ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, நேர்காணல் நடத்த உள்ளனர்.

வேலை வாய்ப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெறும். இதில், - 35 வயது வரையிலான பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement