மஞ்சள் நிற குடிநீரால் கடலுார் மக்கள் அவதி
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதால் பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்தாத நிலை உள்ளது.
கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் திருவந்திபுரம் மலையில் அமைத்துள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், திருவந்திபுரம் ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படும் குடிநீர் செம்மண் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை ஆற்று மணல் உள்ள ராட்சத தொட்டியில் தேக்கி வடிகட்டி பின்னர் கடலுார் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது என்ன காரணத்தினாலோ குடிநீர் செம்மண் கலரில் வருகிறது. இந்த குடிநீரை நேரடியாக குடிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த குடிநீரை பில்டர் மூலம் வடிகட்டி பிடித்தால்கூட ஓரளவுக்கு தண்ணீர் தெளிகிறது.
இதனால் துணிகள் சலவை செய்தால் வெள்ளைத்துணிகள் முழுவதும் செம்மண் கலராகி விடுகின்றன. எனவே வினியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும்.
மேலும்
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
-
த.வெ.க., பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
-
தீப திருவிழா அனுமதி சீட்டு இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன் வழங்க நடவடிக்கை
-
கொரியரில் வந்த 2.7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: வடமாநில தொழிலாளி கைது
-
மாவட்டம் முழுவதும் மிதமான மழை