கீரப்பாளையம் ஜெ., பேரவை செயலாளர் நீக்கம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அதிரடி
சிதம்பரம்: அ.தி.மு.க.,வில், கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்த கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வில், ஏற்கனவே இருந்த சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளோடு, சமீபத்தில் புவனகிரி தொகுதியும் சேர்க்கப்பட்டது. மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன் உள்ளார்.
இந்நிலையில், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் பிரவின், தனக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பதவி வழங்காததால், மாவட்ட செயலாளர் பாண்டியனை விமர்சித்தும், கட்சிக்கு எதிராக பேசி வந்தார்.
இந்நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, கட்சியின் பொதுச் செயலாளரான பழனிசாமி அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், கட்சியின் சட்ட திட்டங்களை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், கீரப்பாளையம் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் பிரவீனை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
-
த.வெ.க., பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
-
தீப திருவிழா அனுமதி சீட்டு இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன் வழங்க நடவடிக்கை
-
கொரியரில் வந்த 2.7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: வடமாநில தொழிலாளி கைது
-
மாவட்டம் முழுவதும் மிதமான மழை