சஞ்சீவிராயர் கோவில் இடிந்து விழுந்தது

கடலுார்: அழகியநத்தம் கிராமத்தில் பழமையான சஞ்சீவிராயர் கோவில் திடீரென இடிந்து விழுந்தது.

கடலுார் அடுத்த அழகியநத்தம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலையில், சிதிலமடைந்துள்ள இக்கோவிலை புதுப்பிக்க வேண்டி, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் பக்தர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதற்கிடையே கோவிலின் கருவறை உள்ளிட்ட இடங்கள்ள அவ்வப்போது பகுதி, பகுதியாக இடிந்து விழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று கோவிலின் பின் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இனியாவது கோவிலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement