இன்றைய நிலவரம்; வார துவக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 13,535 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை; சென்னை வார துவக்க நாளான இன்று (அக்டோபர் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும்
-
நீர்நிலை ஓரங்களில் பனை விதை நடவு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
சமஸ்கிருத வகுப்பில் இலவசமாக சேரலாம்
-
இடமிருந்தும் இருக்கை இல்லை விசிறி இருந்தும் காற்று இல்லை: சோழவந்தான் பதிவு அலுவலக அவலம்
-
பாரா ஆசிய விளையாட்டு: முதல் நாளில் இந்தியா பதக்க மழை
-
நியூசிலாந்து முதலீட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்: பியூஷ் கோயல்
-
உணவு பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செ ல்வதில் அலட்சியம்: எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை