சென்னையில் 4 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பாலம்; டெண்டர் கோரியது தமிழக அரசு

2

சென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

சென்னையின் முக்கிய சாலையான லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக மேம்பாலம் வரை 4 கி.மீ., உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது. உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான டெண்டர் பணியை மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும். டெண்டர் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. திட்ட அறிக்கையை தயாரிக்க 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை முழுமையான தயாரிக்கப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்ந்த பின்னர், இந்தப் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement