எழுத்தாளர்கள், குறும்பட இயக்குநர்கள் படைப்புகளை பதிவு செய்ய அழைப்பு

திண்டுக்கல்: ‘புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள், குறும்பட இயக்குநர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டி கவுரவிக்கப்பட உள்ளதால் அது குறித்த விபரங்களை பதிவு செய்யலாம்’ என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

13வது புத்தகத் திருவிழா அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் அக்.,22 முதல் நவ.,11 வரை 11 நாட்கள் நடக்க உள்ளது. தலைசிறந்த ஆளுமைகள் பேச உள்ளனர். எழுத்தாளர்கள், குறும்பட இயக்குநர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டி கவுரவிக்கப்பட உள்ளனர். இதனால் தங்களது படைப்புகள் குறித்த விபரத்தினை திண்டுக்கல் இலக்கியக் களம் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

புத்தகத் திருவிழாவில் தென்னக கலை பண்பாட்டு மைய கலை நிகழ்ச்சிகள், சக்தி கலைக்குழு கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

பொதுமக்கள் சிரமம் இன்றி வந்து செல்ல திண்டுக்கல் நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நிறைவு விழாவில் மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று நல்லாசிரியர்கள், அதிகளவில் புத்தகங்கள் வாங்கிய கல்வி நிறுவனங்களை பாராட்ட உள்ளார்’ என்றார்.

Advertisement