பசி இல்லா அரியாங்குப்பம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., புது திட்டம்
புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் எளியோர் மதிய உணவு எனும் பசியில்லா மதிய உணவு திட்டத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி செயல்படுத்தி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்.,கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் அய்யப்பன் எம்.எல்.ஏ.,
தொகுதி மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற அவர், பதவியேற்றது முதல் அரியாங்குப்பம் தொகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, தனது தொகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் எவரும் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய நோக்கில், மனிதநேயத்தின் அடையாளமாக 'பசியில்லா அரியாங்குப்பம்' என்ற நோக்கத்தை கொண்டு எளியோர் மதிய உணவு எனும், விலையில்லா மதிய உணவுத் திட்டத்தை அவர் தொடங்கி நடத்தி வருகிறார்.
தினமும் சுவையான சைவ உணவு:: இத்திட்டம் குறித்து அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் கூறியதாவது:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஆசியோடு, அரியாங்குப்பம் தொகுதி ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பசியோடு ஒருவர் கூட இருக்கக் கூடாது' என்ற மனிதநேயக் கொள்கையே இதன் முதன்மை நோக்கமாகும்.
கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி எனது எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து நாள்தோறும் மதியம் 12 மணிக்கு ஏழை, எளிய மக்களுக்குச் சத்தான, ஆரோக்கியமான சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எனது சொந்தச் செலவிலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன். ஒரே மாதிரியான உணவாக இல்லாமல், தினமும் சுவைமிக்கப் பல்வேறு வகையான உணவுகள் மாற்றி மாற்றி வழங்கப்படுகின்றன, என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வயிறார வாழ்த்திச் செல்லும் மக்கள்:: அய்யப்பன் எம்.எல்.ஏ.,வின் இந்த பசியில்லா அரியாங்குப்பம் முன்முயற்சியால், தொகுதியில் உள்ள முதியோர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் தினமும் மதிய வேளையில் பசியாறி வருகின்றனர்.
எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்து வயிறார உணவு உண்டு செல்லும் பொதுமக்கள், எங்கள் பசியைப் போக்கி வயிற்றையும் மனதையும் குளிர வைக்கும் எம்.எல்.ஏ. அய்யப்பனின் சேவை மேலும் தொடர வேண்டும் என பாராட்டு தெரிவித்தனர்.
அரியாங்குப்பம் தொகுதியில் இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்