ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி சாமந்தி பூ, பழங்கள் விலை அதிகரிப்பு
திருத்தணி: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி, திருத்தணியில் சாமந்தி பூ மற்றும் பழங்கள் விலை மும்மடங்கு விலை அதிகரித்துள்ளது.
திருத்தணி காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே, பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு, திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, விவசாயிகள் சாமந்தி, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட, பல்வேறு ரக மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என, பண்டிகைகள் வருவதால், சாமந்தி பூ விலை அதிகரித்துள்ளது.
அதாவது, கடந்த வாரம் வரை, சாமந்தி பூ கிலோ 45–60 ரூபாய் வரை விற்கப்பட்டது. நேற்று, கிலோ சாமந்தி பூ, 200 – 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதே போல், டஜன் மஞ்சள் வாழைப்பழம் 60 ரூபாய், தேங்காய் 30 – 50 ரூபாய், ஜோடி வாழைக்கன்று 100 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், கிலோ ஆப்பிள் 200 – 250 ரூபாய், கொய்யா 120 – 150 ரூபாய், மாதுளம் 150 – 200 ரூபாய், ஆரஞ்சு 100 – 120 ரூபாய், சாத்துக்குடி 50 ரூபாய் என, ரகவாரியாக விற்பனை செய்யப்பட்டது. பொறி மூட்டை 400 – 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.