இளைஞர் காங்., தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்., தேர்தலை முன்னிட்டு, இளைஞர் காங்., தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், இளைஞர் காங்., தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்பாளர்களும் தவறாமல் கலந்துகொண்டு, தேர்தல் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர் காங்., பற்றிய விழிப்புணர்வும், கட்சியின் அடிப்படை கொள்கைகள் மற்றும் எதிர்காலப் பணிகளை அறிந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ ., வைத்தியநாதன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, முன்னாள் இளைஞர் காங்., தலைவர்கள் இளையராஜா, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது
Advertisement
Advertisement