கள்ளக்குறிச்சியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் அப்பாவு, முனுசாமி, மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட உறுப்பினர்கள் அமுதா, கவுதமி, மேரி, ராஜி, அருள்மணி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கைகளை விரிவாக அறிவிக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம், கட்டடம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து முத்தரப்பு குழுக்களையும் உடனடியாக நியமித்து செயல்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி, மருத்துவம், போக்குவரத்து, மின்சார வாரியம், டாஸ்மாக், சிவில் சப்ளை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங், சுயஉதவிக்குழு போன்ற ஒப்பந்த முறைகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ம் தேதி கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Advertisement