மொபைல் பறித்தவர் சிக்கினார்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்-பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 23; செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று மதியம், கொக்கராயன்பேட்டை அடுத்த முனியப்பன் கோவில் பகுதி வழியாக சென்றபோது டூ வீலர் பழுதாகி நின்றது. அப்-போது, அந்த வழியாக வந்த டூவீலரில் வந்த இருவர், பிரசாந்துக்கு உதவி செய்வதுபோல் நடித்துள்ளனர். தொடர்ந்து, 20,000 ரூபாய் மதிப்-புள்ள மொபைல் போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகார்படி, கொக்கராயன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மொபைல் போனை திருடியது, கொக்கராயன்-பேட்டை பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் மற்றும் சந்திப் என்பது தெரியவந்தது. 18 வயது சிறுவனை பிடித்த போலீசார், தலைமறைவாக உள்ள சந்திப்பை தேடி வருகின்றனர்

Advertisement