சேலம், இடைப்பாடி, நாமக்கல்லில் இன்று காலைக்கதிர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

சேலம்: 'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில், விஜயதசமி நாளான இன்று, 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி, சேலம், இடைப்பாடி, நாமக்கல் ஆகிய இடங்-களில் நடக்கிறது. பிரபல கல்வியாளர்களும், துறை நிபுணர்களும் பங்கேற்று, குழந்தைகள்
கைபிடித்து, 'வித்யாரம்பம்' செய்ய உள்ளனர்.
நவராத்திரி விழாவின், 10ம் நாளான, விஜயதசமி நன்னாளில் தொடங்கும் நிகழ்வுகள் வெற்றியை தரும் என்பது நம்பிக்கை. கல்விக்
கடவுளான சரஸ்வதி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்நன்னாளில், குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டு
வருகிறது.

காலைக்கதிர் நாளிதழ், நடுநிலையான செய்தி-களை வழங்குவதோடு நின்று விடாமல், வாசகர் குடும்பங்களுக்கு உதவும், கல்வி சார்ந்த பல்-வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், ஒவ்வொருவரின் குழந்-தையும், எதிர்காலத்தில் பிரபலமாகவும், கல்வி-யாளர்களாகவும் மாற வேண்டும் என்ற பெற்-றோரின் கனவை நனவாக்க, ஆண்டுதோறும் வித்யாரம்பம் நிகழ்ச்சியை 'பட்டம்' இதழ் சார்பில் நடத்தி
வருகிறது. நடப்பு ஆண்டு, சேலம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இன்று நடக்கிறது.
சேலம், வடக்கு அம்மாபேட்டை பகுதியில் உள்ள சாய்சக்தி மெட்ரிக் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்-சியில், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் காந்திமதி, சேலம் பி.எஸ்.என்.எல்., இணைபொதுமேலாளர்(செயல்பாடுகள்) சுபா, சாய்சக்தி மெட்ரிக் பள்ளி தலைவர் கார்த்திகை-பாலன், செயலர் கலைச்செல்வி ஆகியோர் பங்-கேற்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய
உள்ளனர்.
இடைப்பாடி, யுனிவர்சல் பப்ளிக் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், சங்ககிரி டி.எஸ்.பி., சுரேஷ்குமார், இடைப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன், இடைப்பாடி யுனிவர்சல் எஜூகேஷனல் இன்ஸ்-டிடியூசன் சேர்மன் சீனிவாசன் ஆகியோர் பங்-கேற்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், வேப்பநத்தம், நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வ-ராஜூ, நாமக்கல், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், நாமக்கல் சைபர்கிரைம் ஏ.டி.எஸ்.பி., விஜயராகவன், நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் சரவணன் ஆகியோர் கலந்து
கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சிகள் இன்று காலை, 8:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. முன்பதிவு செய்து, பங்கேற்கும் அனைத்து குழந்தைக-ளுக்கும், 1,000 ரூபாய் மதிப்பில் பரிசு பொருட்க-ளுடன், அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்
வழங்கப்படும்.
சேலம் நிகழ்ச்சியை சாய் சக்தி மெட்ரிக் பள்ளி, இடைப்பாடி நிகழ்ச்சியை யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, நாமக்கல் வேப்பநத்தம் நிகழ்ச்சியை, நேஷனல் பப்ளிக் பள்ளி இணைந்து வழங்குகின்-றன. சேனல் பார்ட்னராக, 'தமிழ்ஜனம்' தொலைக்-காட்சி இணைந்துள்ளது.

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்நன்னாளில், குழந்தைக-ளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது

Advertisement