22 டயர்கள் திருடியவர் சிக்கினார்
ஊத்துக்கோட்டை: தனியார் ‘டயர்’ தயாரிப்பு நிறுவனத்தில், 22 டயர்களை திருடிய, அமுல்ராஜ், 35, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில், தனியார் டயர் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அங்கு விற்பனை மேற்பார்வையாளராக பணியாற்றி வரும், வடமதுரை, பேட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த அமுல்ராஜ் என்பவர், கடந்த ஜூலை, 1ம் தேதி, திருட்டுத்தனமாக, 22 டயர்களை லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதை ‘சி.சி.டி.வி’ கேமராவில் பார்த்த மேனேஜர் சின்னிகிருஷ்ணன், 58, என்பவர், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் அமுல்ராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பேட்டைமேடு கிராமத்திற்கு வந்த அமுல்ராஜை, பெரியபாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், 22 டயர்களை திருடியதை ஒப்புக் கொண்டார்.
மேலும், தன்னிடம் இருந்த நான்கு டயர்களை ஒப்படைத்த அவர், மீதமுள்ள, 18 டயர்கள் பேட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வினோத் ஆகியோரிடம் உள்ளதாக கூறியுள்ளார். போலீசார், அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்