முதல்வர் பிரசாரத்தில் இடையூறு செய்த வழக்கு தராபுரம் நா.த.க., பெண் வேட்பாளர் கைது
திருப்பூர்: தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதல்வர் விஜயின், ‘ரோடு ஷோ’வில் இடையூறு செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில், சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதல்வர் விஜய், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தபோது, அதே வழியில், நா.த.க., வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
வேறு வழியில் செல்லுமாறு போலீசார் கூறியதற்கு, அவர்கள் வாக்குவாதம் செய்ததால், போலீசார் அவர்களை வேனில் ஏற்றி சென்று, பின் விடுவித்தனர். முதல்வர் ரோடு ஷோவில் இடையூறு செய்தது, போலீசாருடன் வாக்குவாதம் செய்தது, தொண்டரை தாக்கியது உட்பட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் உட்பட ஒன்பது பேரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் முன்பு நா.த.க.,வினர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதானவர்களை போட்டோ எடுக்க விடாமல், பத்திரிகையாளர்களை போலீசார் தடுத்தனர்.
விளாங்குறிச்சியில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்ட கார்த்திகா, பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, கார்த்திகா கூறுகையில், “கள்ளச்சந்தையில் சாராயம் விற்பவர்கள் கூட தைரியமாக உள்ளனர். இறுதிகட்ட பிரசார நாளில், வேட்பாளராக ஓட்டு சேகரிக்க உரிமை இல்லையா? இரவு உடையில் இருந்த என்னையும், என் கணவரையும், அதிகாலை 5:00 மணிக்கு போலீசார் கைது செய்துள்ளனர்,’’ என்றார்.
@block_B@
த.வெ.க., அரசு வீழும் நாள்
வெகுதொலைவில் இல்லை
மாநிலம் முழுதும் சட்டம் –ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்து போயிருக்கும் சூழலில், அவற்றை சரி செய்ய காவல் துறையை பயன்படுத்த துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழி வாங்கலுக்காக, பொய் வழக்கை புனைந்து, கார்த்திகாவை கைது செய்தது கேவலமான அரசியல் இல்லையா? ஐந்து மாத ஆட்சியிலேயே, ஆயிரத்தெட்டு நிர்வாக சீர்கேடுகளும் குளறுபடிகளும் குழப்பங்களும் தலைவிரித்தாடுகின்றன.
ஆட்சி நிர்வாகம் தறி கெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாத மக்கள், வீதிக்கு வந்து போராடுகின்றனர். அவற்றைச் சரி செய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட த.வெ.க., அரசு, அரசியல் பழி வாங்கலுக்காக, தன் கவனத்தைச் செலுத்தும் என்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சிblock_B
@block_B@
நா.த.க., வேட்பாளர் கார்த்திகா கைதுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* ஸ்டாலின்:
ஒடுக்கப்பட்ட சமுக பெண்களை கைது செய்து அச்சுறுத்துவதன் வாயிலாக, த.வெ.க., எதை சாதிக்கப்போகிறது? கடந்த காலங்களில், தி.மு.க.,வை கார்த்திகா விமர்சித்தபோது, கொள்கை வழி நின்று பதிலளித்தோம். ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக த.வெ.க., அரசு நடந்து கொள்கிறது. குற்றவாளிகளை காப்பாற்றி, போராடுவோரை கைது செய்வதில், பா.ஜ.,வுக்கும் த.வெ.க.,வும் தான் போட்டி நடக்கிறது.
* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
தேர்தல் நேரத்தில் போட்ட வழக்குகளை காட்டி, தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ள, வன்ம குடோன் ஆட்சியாளர்கள், இப்படிப்பட்ட பாசிச போக்கை கையாள்வது வெட்கக்கேடு. நாசிச போக்கை, விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
* எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி:
நா.த.க., சகோதரி கார்த்திகாவை, ‘சர்க்கஸ்’ அரசு, கைது செய்ததை கண்டிக்கிறேன். போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசை திருப்ப, தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கில், அரசியல் பழிவாங்கலோடு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.block_B
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்