மூதாட்டியிடம் 5 பவுன், ரூ.3 லட்சம் மோசடி: கரூரை சேர்ந்தவர் கைது
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கரிக்காலி ஊராட்சி விராலிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பாப்பாத்தி 70. இவர் 2019ல் குடும்ப செலவிற்காக தனது 5 பவுன் நகையை உறவினரான டி.கூடலுார் பால்வார்பட்டி மணியிடம் கொடுத்து அங்குள்ள வங்கியில் அடகு வைத்தார்.
2021ல் நகையை மீட்டுத்தருமாறு கேட்டதை தொடர்ந்து மணியும் அவரது நண்பரான கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பூஞ்சோலைப்பட்டி சுரேஷ் 42, என்பவரும் சேர்ந்து நகையை திருப்பினர். ஆனால் நகையை பாப்பாத்தியிடம் கொடுக்காமல் சுரேஷ் கொண்டு சென்றார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் பாப்பாத்திக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வாங்கித் தருவதாக கூறி சுரேஷ் ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு அதனையும் வாங்கித் தரவில்லை. இது குறித்து பாப்பாத்தி குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகிறார்.
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’