ரயில் மூலம் சின்னசேலம் வந்த உர மூட்டைகள்

சின்னசேலம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து யூரியா உர மூட்டைகள் சரக்க ரயில் மூலம் சின்னசேலம் வந்தடைந்தது.

மங்களூருவில் உள்ள இண்டியன் பொட்டாஷியம் லிமிடெட் நிறுவனத்திலிருந்து நேற்று சின்னசேலத்திற்கு 1337 டன் யூரியாஉரம் சரக்கு ரயில் மூலம் வந்து இறங்கின. இந்த உர மூட்டைகள் 21 ரயில் பெட்டிகளில் வந்தன. உர மூட்டைகளை ஒப்பந்ததாரர் கோபிநாத் விற்பனை அதிகாரி தமிழ்ச்செல்வன் முன்னிலையில் லாரிகளில் ஏற்றப்பட்டது.

இந்த உர மூட்டைகள் விழுப்புரம், கடலுார் அறியலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அந்தந்த கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

Advertisement