தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு

1

புதுடில்லி: டில்லியில் ஆங்கில செய்தி சேனலுக்கு மத்திய பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேர்காணல் அளித்தார்.

அவர் கூறியதாவது; பார்லியில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. தொகுதி மறுவரையின் போது எந்தவொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது. அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகள் அதிகரிக்கப்படும்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக, சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. காங்கிரஸ் தலைவர் கார்கே, எம்பி ராகுல் ஆகியோருக்கு 10க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் புறக்கணித்து விட்டனர்.

நாகரிகம், கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமையான நாடுகள், தீவிர இடதுசாரி கருத்துகளால் பாதிக்கப்படுவது கிடையாது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement