ஆர்டிகல்சிறந்த மாணவர்களை உருவாக்கும் இராஜா தேசிங்கு கல்வி நிறுவனங்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், களையூர் நாட்டார்மங்கலத்தில், 1998 ஆம் ஆண்டு இராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி இராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டது.

தலைவராக செஞ்சி பாபு, செயலாளராக, அய்யப்பன், பொருளாளராக அண்ணாமலை, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக நீண்ட அனுபவம் பெற்ற கார்த்திகேயன் உள்ளார்.

கல்வி நிறுவனம் குறித்து இதன் தலைவர் செஞ்சி பாபு கூறியதாவது.

கிராமப்புற ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி இந்த கல்லூரி துவங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் என 5 பிரிவுகள் உள்ளன. கல்லூரியில் அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது.

செஞ்சி வட்டதில் முதல் சி.பி.எஸ்.சி. பள்ளியாக இராஜா தேசிங்கு பப்ளிக் ஸ்கூல் துவங்கப்பட்டு எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

2025 - 2026ம் கல்வி ஆண்டில் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.

20 ம் தேதி விஜயதசமியன்று பிரி.கே.ஜி, எல்.கே.ஜி., சேர்க்கை நடைபெற உள்ளது.

இராஜா தேசிங்கு கல்வியியல் கல்லூரி 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

1997 ம் ஆண்டு இராஜா தேசிங்கு ஐ.டி.ஐ துவங்கப்பட்டது. மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பிட்டர் ஆகிய பிரிவுகள் உள்ளன. கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்காக அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி சேரும் எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் முழுவதும் இலவசமாகும். இறுதியாண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் சிறந்த நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

இராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளையி சார்பில் 2027ல் கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் மருந்தீஸ்வரர் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (MIMS) என்ற பெயரில் புதிய மருத்துவமனை துவங்க உள்ளோம்.

Advertisement