அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, வெற்றியால் சிறக்க வேண்டும்; பிரதமர் மோடி விருப்பம்

10

புதுடில்லி: விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:

* விஜயதசமி நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

* மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த வெற்றித் திருநாள், அனைவரது வாழ்க்கையை மேம்படுத்தட்டும்.

* அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் சிறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

விஜயதசமி நன்னாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராவணனுக்கு எதிராக ஸ்ரீராமன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் இந்தத் திருநாள், தனிச்சிறப்பு வாய்ந்தது. தீமைக்கும் அநீதிக்கும் எதிரான அறத்தின் மற்றும் நீதியின் வெற்றியை இந்தத் திருநாள் கொண்டாடுகிறது.

இந்திய கலாசாரம் அறம், கடமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ராமனின் வெற்றியை உணர்த்தும் இந்த நாளில், நமது பாரம்பரியத்தை காக்கவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம். இந்த புனிதமான தருணத்தில், மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல் ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

வீ தி லீடர்ஸ் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை

தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும்.

அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும். அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.

Advertisement