ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைவு
சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 13,535 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று (அக்டோபர் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 20) சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிறப்பு வீடியோ!
விஜய தசமியன்று சடாரென சரிந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விஜயதசமி அன்று தங்க விலை குறைந்திருப்பது இதுதான் எனக்கு தெரிந்து முதல் முறை