மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டுமைதானத்தில் போதை ஊசிகள்: போலீஸ் தனிப்படையினர் தீவிர விசாரணை
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் கிடந்த போதை ஊசி குவியல்கள் குறித்து வழக்குப்பதிந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இம்மைதானத்தில் நேற்று முன்தினம் முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் துவங்கின. அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார். இங்குள்ள ஆண்கள் கழிப்பறைகளின் மேல் பகுதிகளில் ஊசி, மருந்து பாட்டில்கள் குவிந்து கிடந்தன. அதையொட்டிய தரைப்பகுதிகளிலும் ஆங்காங்கே மருந்துப் பாட்டில்கள், ஊசிகள் கிடந்தன. இதுகுறித்து போலீஸ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது பிற மயக்கப்பொருட்களைக் கொடுத்து காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதல்வர் கோப்பைக்கான போட்டிகள், அரசுப் பணியில் உள்ள அலுவலர்களுக்கான போட்டிகள் என ஒன்றரை மாதங்களாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். நேற்றுமுன்தினம் கழிப்பறையில் இருந்து கைப்பற்றிய காலி ஊசிகள், மருந்துகள் பல நாட்களுக்குமுன் பயன்படுத்தியதாக தெரிகிறது. அவை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்றனர்.
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது