சமுக பொறுப்பு இல்லாத சமுதாய கல்லுாரி: நுழைவு வாயில் எதிரே குப்பை மேடு
புதுச்சேரி: சமுதாயக் கல்லூரியின் நுழைவு வாயிலுக்கு எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ்பேட்டை பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் கடந்த 16-ம் தேதி, சமுதாயக் கல்லுாரியின் புதிய கட்டடத் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் கவர்னர் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழா, சிறப்பாக நடைபெற்ற நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் இதரப் பொருட்களின் கழிவுகள் அனைத்தும், விழா முடிந்ததும் கல்லுாரியின் எதிரே உள்ள தாகூர் அரசு கலைக் கல்லுாரியின் மதில் சுவரையொட்டி ஒட்டுமொத்தமாகக் கொட்டப்பட்டுள்ளன.
விழா முடிந்து நான்கு நாட்கள் கடந்தும் கூட இந்தத் துர்நாற்றம் வீசும் குப்பைகள் அகற்றப்படவில்லை. காற்றில் பறந்து அருகில் உள்ள வாய்க்காலில் விழுவதுடன், நாய்கள் குதறிச் செல்வதால் அந்தப் பகுதியே அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது.
மாணவர்களுக்குத் துாய்மையை போதிக்க வேண்டியதே கல்லுாரியின் அடிப்படைக் கடமை. ஆனால், கல்வி நிறுவனமே தனது நுழைவு வாயிலுக்கு எதிரே குப்பைக் கூளங்களை அலட்சியமாகக் காட்சிப் பொருளாக மாற்றிவிட்டது ஏன்? என்று அப்பகுதி வழியாக நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
பெரிய விழாக்கள் நடத்துவது தப்பில்லை. ஆனால், அதனால் உருவாகும் கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விழா நடத்தும்போதே உரிய திட்டமிடல் அவசியமாகும். விழா முடிந்தவுடன் மக்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எனத் தரம் பிரித்து, உழவர்கரை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களை வரவழைத்துச் சமூகப் பொறுப்புடன் அகற்றியிருக்க வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் சமுதாயக் கல்லூரி, பொறுப்பற்ற முறையில் பொது இடத்தில் குப்பைகளைக் கொட்டியிருப்பது அழகல்ல.
எனவே, பொறுப்பற்ற முறையில் பொது இடத்தில் குப்பைகளை வீசிய சமுதாயக் கல்லூரி நிர்வாகத்திற்கு உழவர்கரை நகராட்சி உடனடியாக அபராதம் விதிப்பதுடன், தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும்
-
அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, வெற்றியால் சிறக்க வேண்டும்; பிரதமர் மோடி விருப்பம்
-
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
-
தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி
-
பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் அதிபரை சாடிய டிரம்ப்
-
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்றதா ஆட்சி
-
செவ்வாயின் நிலவை குறிவைக்கும் ஜப்பான்: மண் துகள்களை அள்ளிவர ராக்கெட் பாய்ந்தது