அக்காவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது

சேத்தியாத்தோப்பு: அக்காவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்துாரை சேர்ந்த சண்முகம் மனைவி கலைச்செல்வி, 35; இவர் கடந்த 4 ம் தேதி வீட்டிலிருந்த போது, இவரது தம்பி அருண்ராஜ், 32; அங்கு சென்று பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டார்.

தரமறுத்த கலைச்செல்வியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடினார். இது குறித்து கலைச்செல்வி புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சாக்காங்குடி வீட்டில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலையொட்டி, அருண்ராஜை போலீசார் கைது செய்தனர். இவர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement