குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் 14 வயது பள்ளி மாணவிக்கு, பெற்றோரே உறவினர் ஒருவருடன் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கடந்த ஆக., மாதம் திருமணம் நடந்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். தனது ஆசிரியரிடம் தெரிவித்து அழுதுள்ளார். பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியின் கணவர், கணவரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கணவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement