வீட்டுக்கு வீடு சோலார் மின் திட்டம் பிரபலப்படுத்த மின்வாரியம் தீவிரம்

போத்தனூர்: சோலார் சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பிரதமரின் சூரிய வீடு மினசார திட்டம் கடந்த, 2024ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் தகடுகள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வாட் மின் திறன் உற்பத்திக்கு, 35 ஆயிரம், இரண்டு கிலோ வாட்டிற்கு, 70 ஆயிரம், மூன்று கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் என மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழஙகப்பட்டு வருகிறது.

பணி முடிந்த ஏழு முதல், 30 நாட்களுக்குள் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானிய தொகை நேரடியாக செலுத்தப்படும். மானிய தொகை போக சோலார் தகடுகள் பொருத்த ஆகும் செலவு தொகையை முன்னோடி வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை தெற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட குனியமுத்தூர் பகுதிக்கான கூட்டம், போத்தனூரில் நடந்தது.

இதில், சோலார் மின் தகடுகள் உற்பத்தியாளர்கள், 22 பேர், ஐந்து வங்கியினர் மற்றும், 104 மின் நுகர்வோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேற்பார்வை இன்ஜி. வைத்தீஸ்வரன் தலைமையில், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement