விடுதி உணவில் புழு; வரிசைகட்டும் புகார் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்

1

கோவை: கோவையில் 200க்கு மேற்பட்ட கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், நர்சிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பெரும்பாலானவை விடுதிகளுடன் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக 2 மாதங்களில், 10 புகார்கள் பதிவாகியுள்ளன.

இரவு நேர உணவில் புழு இருப்பதாகவே, தொடர்ந்து புகார் வருகிறது. இதற்காக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தொடர் கதையாகிறது. பாரதியார் பல்கலை விடுதி உணவிலும் புழு இருந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

சமையலறை, உணவு பாத்திரங்கள் பராமரிப்பு, காய்கறி, மளிகை பொருட்கள் சேமிப்பு, உரிய தயாரிப்பு ஆகியவை குறித்து விடுதி பொறுப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பயிற்சி அளிக்க கோரிக்கை வலுத்துள்ளது.

அந்த துறை அதிகாரிகள் கூறுகையில்,‘அரிசி, காய்கறிகளை நன்கு கழுவாமல் பயன்படுத்துவதால், உணவில் புழு இருக்கலாம். தரமற்ற உணவு சார்ந்த புகார்களை மாணவர்கள், 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ, unavupukar@gmail.com இ–மெயில் முகவரியிலோ அளிக்கலாம். 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும்,’ என்றனர்.

Advertisement