தாசில்தார் அலுவலகத்தில் அவலம்!

பந்தலூர்: பந்தலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக, தனியார் மற்றும் அரசு பள்ளிகள், பந்தலூர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

சாலையில் தாசில்தார் அலுவலக முகப்பு பகுதியில், தாழ்வாக அமைந்துள்ள சாலையில், மழைநீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தாசில்தார் அலுவலகம் மற்றும் இ -– சேவை மையம் செல்லும் பொதுமக்கள், தேங்கி நிற்கும் தண்ணீரில் சிரமத்துடன் செல்கின்றனர். தாசில்தார் அலுவலக ஊழியர்களும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மழை நீரால் கட்டடங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement