உங்கள் கனவு இல்லத்திற்கு TMT கம்பிகளைத் தேர்வு செய்வது எப்படி?

திண்டுக்கல்: தென் தமிழகத்தின் ஏ.ஆர்.எஸ்., ஸ்டீல் டி.எம்.டி., கம்பிகளின் மொத்த விற்பனை நிறுவனமாக ஸ்ரீசிவபாலாஜி டி.எம்.டி., ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளது. ஏ.ஆர்.எஸ்., டி.எம்.டி., நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் கோவிந்தராஜன் கூறியதாவது: டி.எம்.டி., கம்பிகளைத் தேர்வு செய்யும்போது, அவற்றின் தரத்தைக் குறிப்பிடும் Fe 500, Fe 550, Fe 550D போன்ற குறியீடுகளைப் புரிந்துகொள்வது அவசியம். Fe 550D என்பது அதிக வலிமையுடன் மேம்பட்ட நீட்சித்திறனை கொண்ட எக்கு கம்பி வகையாகும். கட்டடத்தின் மீது ஏற்படும் சுமைகளையும், குறிப்பாக, நிலநடுக்கம் போன்ற அதிர்வுகளின்போது உருவாகும் விசைகளையும் கருத்தில் கொண்டு, கட்டமைப்புப் பொறியாளர் பரிந்துரைக்கும் தரத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.CRS என்பது Corrosion Resistant Steel என்பதன் சுருக்கமாகும். அதாவது சாதாரண எக்குடன் ஒப்பிடும்போது மேம்பட்ட துரு எதிர்ப்புத் திறன் கொண்ட எக்கு வகையாகும். CRS 550D கம்பிகளில் சரியான அளவில் சேர்க்கப்படும் தாமிரம், குரோமியம், நிக்கல் பிற கலவைத் தனிமங்கள் சேர்ந்து சிறந்த துரு எதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவுகின்றன.குறிப்பாக கடலோரப் பகுதிகள், அதிக ஈரப்பதம் உள்ள இடங்கள், துருப்பிடிக்கும் அபாயம் அதிகமுள்ள சூழல்களில், கட்டமைப்புப் பொறியாளரின் ஆலோசனையுடன் CRS வகைக் கம்பிகளைப் பரிசீலிக்கலாம். சந்தையில் கிடைக்கும் ARS CRS 550D போன்ற சில பிராண்டுகள் Fe 550D, CRS வகைத் தயாரிப்புகளை வழங்குகின்றன.கம்பியின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் வைத்து அதன் உண்மையான தரத்தை உறுதிப்படுத்த முடியாது. எனவே, வாங்குவதற்கு முன் தொடர்புடைய இந்தியத் தரநிலைகளுக்கு இணங்க கம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். கம்பியில் உள்ள கார்பன், பாஸ்பரஸ், கந்தகம் உள்ளிட்ட தனிமங்களின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இழுவிசை வலிமை, நீட்சித்திறன் போன்றவை உரிய சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கம்பியின் பிராண்ட், தரம், தொகுதி எண் மற்றும் சோதனைச் சான்றிதழ் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.தேவைப்படும்போது, ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் எக்கின் வேதியியல் கலவையைப் பரிசோதிக்கலாம். ARS 550D, CRS, TMT போன்று ஒரு சில உற்பத்தியாளர்கள் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் இருக்கும் இடத்திற்கே வந்து சோதனை செய்து காண்பிக்கிறார்கள்.தரமான TMT கம்பிகளைத் தேர்வு செய்வதற்கு இணையாக, கான்கிரீட் தயாரிக்கவும் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் நீரினை பயன்படுத்தப்படும் போது, நீரின் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நீர் தெளிவாக இருப்பதால் மட்டுமே அது கட்டுமானத்திற்குப் பொருத்தமானது என்று முடிவு செய்ய முடியாது. நீரில் கரைந்துள்ள உப்புகள், பிற வேதிப்பொருட்கள் கான்கிரீட்டின் தரத்தையும், எக்குக் கம்பிகளின் நீண்டக்கால துரு எதிர்ப்பையும் பாதிக்கக்கூடும். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர், எவ்வாறு இருப்பினும் ARS CRS 550D TMT போன்ற கம்பிகள், சிறந்த துரு எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன. தரமற்ற பொருட்களைத் தேர்வு செய்வதால் ஏற்படக்கூடிய நீண்டகால பிரச்னைகளை தவிர்ப்பதே புத்திசாலித்தனமான முதலீடாகும். வலிமையான அடித்தளத்துடன் நமது கனவு இல்லத்தை அமைப்போம்.

Advertisement