அடுத்தக்கட்டத்துக்கு நகரும் சுற்றுலாத்துறை; செயற்கை நுண்ணறிவை கையில் எடுக்கும் மத்திய அரசு
சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்புகள் மாறும் நிலையில், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வழங்குகிறது. 2023 - 24ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை பங்களிப்பு, 5.22 சதவீதம் இருந்தது. இத்துறை மூலம் 8.46 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
2025ல் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை, 428.55 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணகளின் வருகை 2.53 கோடியாகவும் உயர்ந்துள்ளது. சுற்றுலா மூலம் அந்நிய செலாவணி வருவாய், 2 லட்சத்து 76 ஆயிரத்து 831 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பயணத் திட்டமிடல், தகவல் சேவைகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், சுற்றுலா பயணிகளுக்கு, எளிதான அனுபவங்களை வழங்குவதிலும் ஏ.ஐ., முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு எளிதாக்க மின்னணு விசா, 'இன்கிரெடிபிள் இந்தியா' டிஜிட்டல் தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
பயணத்திட்டங்களை உருவாக்குதல், பல்வேறு மொழிகளில் தகவல்களை வழங்குதல், பயணிகளின் வருகை, பருவகால நெரிசல், தங்குமிடத் தேவை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்தவும் ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவும். ஏ.ஐ., மூலம் மெய்நிகர் சுற்றுப்பயணங்கள் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான முன்னோட்டத்தை கண்டுணர முடியும்.
ஐ.ஐ.டி.பி., தளம் டிஜிட்டல் சுற்றுலாவின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப ஏ.ஐ., மூலம் பயணத்திட்டங்களை பரிந்துரைகளை பெறலாம். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 'ஸ்வதேஷ் தர்ஷன் 2.0', 'பிரசாத்' திட்டங்கள் உள்ளன. இவை பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தி, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்க உதவுகின்றன.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஸ்மார்ட் சுற்றுலா உள்கட்டமைப்புகளில், மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் எதிர்காலத்தில் ஏ.ஐ., சார்ந்த சுற்றுலாவில், இந்தியாவை உலகத்தலைமையாக உருவெடுக்க வைக்கும்.
மேலும்
-
நியூசிலாந்து முதலீட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்: பியூஷ் கோயல்
-
உணவு பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செ ல்வதில் அலட்சியம்: எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை
-
முதல்வர் விஜயை அவதூறாகவும், ஒருமையிலும் விமர்சித்த திமுக நிர்வாகி மீது வழக்கு
-
திமுக ஆட்சியின் ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிகள் பயன்தருகிறதா? சென்னை மாநகராட்சி சொல்வது இதுதான்
-
இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை
-
ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள்