சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விரைவாக முடிக்க கோரிக்கை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலில், 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம், கடந்த, 2025 மே மாதத்துடன் முடிந்தது. ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் புதிய ஒப்பந்தம் போடவில்லை. இந்நி-லையில், கடந்த மாதம், 10ல் சேலம் தொழிலாளர் அலுவலகத்திலும், கடந்த மாதம், 18, 24ல் குமார-பாளையம் தாலுகா அலுவலகத்திலும் பேச்சு-வார்த்தை நடந்தது. ஆனால், விசைத்தறி உரி-மையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ள-வில்லை.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, மூன்று முறை நடந்தது. இந்த, மூன்று முறை நடந்த கூட்டத்தை உரிமையா-ளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர். புதிதாக வந்துள்ள, குமா-ரபாளையம் தாசில்தாரை, நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, விசைத்தறி தொழிலாளர்கள் சம்-பள உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து, புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement