நாமக்கல் கவிஞர் 138வது பிறந்த நாள் கொண்டாட்டம்
நாமக்கல்; நாமக்கல் மாவட் டம், மோகனுாரில், 1888 அக்., 19ல், வெங்கடராமப்பிள்ளை, அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், 'நாமக்கல் கவிஞர்' ராமலிங்கம். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் தெருவில், அவரது நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழக அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்-பாட்டில் செயல்பட்டு வரும், நினைவு இல்-லத்தில், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாநகரில் உள்ள நாமக்கல் கவிஞர் ராம-லிங்கம் நினைவு இல்லத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் அவரது மார்பளவு சிலை நிறுவப்பட்-டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் கவிஞரின், 138-வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் மது-பாலன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கவிஞரின் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், பாவேந்தர் பாரதி-தாசன் இலக்கிய பேரவை, வெற்றித்தமிழர் பேரவை சார்பில், அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது