அரசு பஸ் மீது மின் கம்பம் விழுந்து விபத்து: மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ்சின் மீது மின்விளக்கு கம்பம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டையில் இருந்து காட்டுஎடையார் செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 11.30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த சிறுப்பாக்கம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த மின்விளக்கு கம்பம், திடீரென சாய்ந்து அரசு பஸ்சின் மீது விழுந்தது. உடன் டிரைவர், பஸ்சை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டார். மின்கம்பம் அரசு பஸ்சின் மீது விழுந்ததில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
அப்போது மின் கம்பத்தில் மின்சாரம் தடைப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடன் அருகில் இருந்தவர்கள் மின் கம்பத்தை அகற்றி பஸ்சை அனுப்பி வைத்தனர். ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது கம்பம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்னை விவசாயத்துக்கு இரட்டை பாதிப்பு
-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது
-
73,933 புத்தகங்கள் கொள்முதல் 144 நுாலகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு
-
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது
-
செஞ்சி சிறுமி மாயம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., மாற்றம்
-
வீணாகும் குடிநீர் அதிகாரிகள் ‘குறட்டை’
Advertisement
Advertisement