வணிகர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் 18 ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், கீர்த்தி மகாலில் நடந்தது.
கூட்டத்தில், பெருந்தலைவராக சிவசங்கர், தலைவராக உமாசங்கர், பொதுச் செயலாளராக முருக பாண்டியன், பொருளாளராக முத்துக்குமரன், துணைத் தலைவர்களாக தண்டபாணி, ஹரிதாஸ், கலீல் ரகுமான், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களாக வைத்தியநாதன், ஷாகுல் அமீது, தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக கார்த்திகேயன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கூட்டமைப்பில் உள்ள 80க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வணிக நல வாரியத்தில் வணிகர்கள் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். கேரளாவில் நடைமுறையில் உள்ள ‘ஆஷ்வாசா’ என்ற வியாபாரிகள் பாதுகாப்பு திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
தென்னை விவசாயத்துக்கு இரட்டை பாதிப்பு
-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது
-
73,933 புத்தகங்கள் கொள்முதல் 144 நுாலகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு
-
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது
-
செஞ்சி சிறுமி மாயம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., மாற்றம்
-
வீணாகும் குடிநீர் அதிகாரிகள் ‘குறட்டை’