கட்சியா, போதைப்பொருள் கடத்தல் கூடாரமா? தவெக மீது திமுக உதயநிதி பாய்ச்சல்
சென்னை: 'த.வெ.க., என்பது கட்சியா, இல்லை போதைப்பொருள் கடத்தல் கூடாரமா என கேட்கும் அளவுக்கு, அக்கட்சிக்குள் போதைப்பொருள் நெட்வொர்க் அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே போகிறது' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 135 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக, த.வெ.க.,வின் நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் கைதானார். அது குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களுக்கு, த.வெ.க.,வின் நாகை நகரச் செயலர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
த.வெ.க.,வில் இருந்து பூபாலன் நீக்கப்பட்ட நிலையில், கட்சி பொறுப்பில் உள்ள மற்றொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும், பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் ஏன்?
'கட்சியா இல்லை போதைப்பொருள் கடத்தல் கூடாரமா' என கேட்கும் அளவுக்கு, த.வெ.க., போதைப்பொருள் நெட்வொர்க்கின் அட்டூழியம் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்த 'டம்மி' முதல்வரின் ஆட்சியில், அவரது கட்சியிலேயே போதைப்பொருள் கடத்தல் மன்னனும், சட்டவிரோத ஏகபோக குழுமமும் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
எனவே, முதல்வர் விஜய், 'ரீல்ஸ்' எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல், கொஞ்சம் யதார்த்தத்திற்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதை கடத்தும் த.வெ.க.,வினரையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
***
உதைநிதி துபாயில் பெத்த எண்ணெய் கெணறு வாங்கி போட்டு உள்ளார். அந்த கணக்கு வழக்குகளை பார்த்து வருவதற்கு அடிக்கடி துபாய்க்கு போய் வருகிறார்.
How is dubai ...be safe
போதைப்பொருள் தவறுதான் ஆனால் இதைச் சொல்வதற்கு உனக்கு யோக்கியதை கிடையாது என்பது எங்கள் கருத்து
nattu maduppu pathi nee kavalapadatha pa
இந்த அறிக்கை துபாயில் இருந்தா அல்லது சென்னையா?
அதை போதை பொருள் மாபியாவே பேசக்கூடாது
Drug smuggling was flourishing in the DMK regime. Threatening journalists who report about party workers, corruption etc is also nothing new for the DMK. Those who live in glass houses should not throw stones.
Who showed the seeds.It has become a gigiantic tree now.
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து போதைப் பொருள் கலாச்சாரத்தை ஊடுருவி வளரவிட்டதே திமுக தான், அது இன்று வளர்ந்து மரமாகி காய்க்கத் தொடங்கி இருக்கிறது. ஒன்றுமே தெரியாத மாதிரி உதயநிதி அறிக்கை விடுகிறார்.
பெரியார் அறிவு உலகத்தை திறந்த போது, திறந்து வைப்பது யாராக இருந்தால் என்ன திட்டமிட்டு துவங்கியது திராவிட மாடல் திமுக அரசு தான் என்று ஸ்டாலின் அவர்கள் கூறினார்.
இதற்கும் அதே கருத்து பொருந்துமா போதைப்பொருள் வழக்கில் பிடிபடுவது யாராக இருந்தால் என்ன துவக்கி வைத்து வளர்த்தது திராவிட மாடல் திமுக அரசு தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஜாபர் சாதிக் என்ற தேசத் தியாகி கடத்தியது எல்லாம் மறந்து விட்டதா ஊழல் இளவரசேமேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்