ஓய்வை விட்டு விட்டு துறையை கையில் எடுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: 'தமிழகத்தில் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், மத்திய விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதை கடத்தல்களும், போலீஸ் துறையில், முதல்வர் விஜய் கவனம் செலுத்துவதில்லை என்பதையே காட்டுகின்றன' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சில நாட்களுக்கு முன்னர் தான், திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டு விட்டு வந்தவர், மனைவி முன்னே கொடூரமாக கொல்லப்பட்டார். அப்போதே, ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிப்பது குறித்து, நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை என, சிவகங்கையில் நடந்துள்ள மற்றொரு கொலை சம்பவம் சுட்டிக் காட்டியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் என்ற ரவுடி, ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். இது, முழுக்க முழுக்க போலீஸ் துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை.
பெருந்துறை அருகே நர்ஸ் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஐந்து நாட்களுக்குப் பின், அவரது சடலத்தை தான் கண்டறிந்தனர். 'நடப்பது நம் ஆட்சி தானே' என நினைத்து, த.வெ.க., நிர்வாகிகளின் போதைப்பொருள் கடத்தலும் கொடிகட்டி பறக்கிறது. வேதாரண்யத்தில் த.வெ.க., ஒன்றிய செயலர், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இப்போது அதே மாவட்டத்தில், உலகத்துக்கே மெத் ஆம்பெட்டமைன் தயாரித்து விற்கும் மையமாக, தமிழகத்தை மாற்ற முயன்ற த.வெ.க., நிர்வாகி பூபாலனும் கைதாகியுள்ளார். முதல்வர் நடித்த திரைப்படங்களை பார்த்து, அவரது கட்சியினர் இதைத்தான் கற்று கொள்கின்றனரா?
போதைப்பொருள்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதல்வர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதற்கு, போலீஸ் துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், முதல்வர் பெயரளவில் மட்டுமே துறைக்கு பொறுப்பு வகிக்கிறார்.
தன்னிடம் உள்ள பல துறைகளின் பொறுப்புகளை பிற அமைச்சர்களுக்கு பிரித்து தந்ததை போல, போலீஸ் துறையையும் பிறரிடம் ஒப்பந்தம் செய்து விட்டாரா?
போலீஸ் துறையில் முதல்வர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதையே, நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், மத்திய அரசின் அமைப்புகளிடம் பிடிபடும் போதை கடத்தல்களும் காட்டுகின்றன. முதல்வர் சார், உங்களது அலட்சியம் உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது. 'போதைப்பொருட்களை கைவிடுங்கள், விளையாட்டை தேர்ந்தெடுங்கள்' என, சொன்ன நீங்கள், முதலில் ஓய்வை விட்டு விட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Ex CM pls rest better and continue ally with CJP hence your party vanish
அவர் சினிமாவை விட்டு வெளிவரனும்...... உங்க குடும்பம் திமுகவை விட்டு வெளியேறனும் .... அப்பத்தான் மக்களுக்கு நிம்மதி
கதறல் பகுத்தறிவு கதறல் அருமை. ups வந்து முட்டு குடுங்க வாங்க
பொழுது விடிந்து பொழுது போகிற மட்டும் அர்த்தமில்லாமல் புலம்பி எரிச்சலூட்டுவதை விட்டுவிட்டும ஓய்வை கையிலெடுத்து வாயைத் திறக்காமல் இருக்கப்பாருங்கள் என்பது மு.முதல்வருக்கு மக்கள் சொல்லும் அறிவுரையாம்.
குடும்பத்துடன் அசிங்கமாக எல்லா மேடையில் பேசுவதை விட வேற என்ன வேணும். திராவிட மாடல் இப்படியே போனால் தி மு க வினர் அவர்கள் மரியாதையை காப்பாற்ற வெளியே வந்து விடுவார்கள். ஊழல். சுரண்டல், வாடகை ஆபாச வாயால், கெடும் திமுக, ஆனாலும் வெத்து அறிக்கை.
உங்கள் மகன் துபாயில் என்ன செய்கிறார்? தமிழ்நாட்டுக்கு குறைந்த விலையில் எப்படி பெட்ரோலியம் கொண்டு வருவது என்று ஒப்பந்தம் போட போயிருக்கிறாரா? முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை அகற்றுங்கள் அப்பா. ஊருக்கு தான் உபதேசம்.
தமிழ் நாட்டை பார்த்து உலகமே வியக்கிறது என் ஆட்சியிலேன்னு கூவி உன் மீடியாகளை வைத்து 24 மணிநேரமும் கத்தவிட்டாய் ...... ஐயோ பாவம் மக்களே உன்னை தூக்கி எறிந்துவிட்டார்கள். இன்னமும் நீ திருந்த மாட்டாயா
உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியுது .. 2021 ல எங்க போட்ட விதை போதை ன்னும் கலாசாரம் உங்கள் மங்குனி ஆட்சியில் விதைத்த விதை இப்போ மரமாகி காடாகி நிக்குது
எனக்கு அட்வைசு பண்ணுறதுதான் புடிக்கும் ...... அதே அட்வைசை நீங்க பாலோ பண்ணுறீங்களான்னு கேட்டா வலிக்குதுன்னு ஓடிருவேன் .....மேலும்
-
10 நாட்கள் கடந்தும் திணறும் போலீஸ்; செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
-
7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் பேச்சு இல்லை: ஈரான் திட்டவட்டம்
-
அரசு பஸ் மீது மின் கம்பம் விழுந்து விபத்து: மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
-
கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
-
வணிகர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
-
கடலுார் சில்வர் பீச்சில் நிறுவப்பட்ட அழகு சிலை 2 ஆண்டில் இடித்து தரைமட்டம்: வரிப்பணம் விரயம்