ரூ.3.52 லட்சம் கோடி தள்ளுபடி அறிவித்தும் புதிய பொருட்கள் வாங்க சீனர்கள் தயக்கம்
பீஜிங்: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உயர் தொழில்நுட்பங்களை வளர்க்கவும், பொருளாதாரம் தேக்கமடைவதை தடுக்கவும், மக்களின் வாங்கும் திறனை துாண்டும் வகையில், 3.52 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி சலுகையை சீன அரசு அறிவித்துள்ளது; ஆனாலும் மக்களிடம் தயக்கம் நீடிக்கிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ஏற்றுமதி துறை வலுவாக இருந்தாலும், பொருளாதாரம் சீராக இயங்க மக்கள் தொடர்ந்து பொருட்களை வாங்குவது அவசியம்.
சிறப்பு தள்ளுபடி
ஆனால், சீன மக்கள் பணத்தை செலவழிக்காமல் சேமிக்கத் தொடங்கியதால், சந்தையில் பொருட்கள் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனர்கள் ஷாப்பிங் செய்வதை தவிர்த்து விட்டு சேமிப்பில் கவனம் செலுத்தியதால், உள்நாட்டு சில்லரை விலை விற்பனை வளர்ச்சி என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நுகர்வோர் பணத்தை செலவழித்தால் மட்டுமே சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் சுழற்சி பெறும் என்பதால், மக்களின் தயக்கத்தை போக்க சீன அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் நோக்கில், பழைய மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாற்றி, புதிதாக வாங்கிக்கொள்ள, சிறப்பு தள்ளுபடி சலுகையை சீன அரசு அறிவித்தது. இதற்காக, 3.52 லட்சம் கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 10.8 கோடி டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் மின்னணு பொருட்களின் கொள்முதலுக்கும் அரசு மானியம் வழங்கியுள்ளது.
கவலை
இதன் கீழ், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிக்கு, 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும், எரிசக்தி சேமிப்பு ஆற்றல் கொண்ட ஆறு வகை வீட்டு உபயோக பொருட்களுக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் மின்னணு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனாலும், முந்தைய அளவைவிட குறைவாகவே உள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ளபோதும், உள்நாட்டு தேவை குறைவாகவே உள்ளது, சீன அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவங்க ஊர் பொருளின் தரம் அவங்களுக்குத் தெரியும்.நம்ம ஊரில் அது தெரியாமல் சீனப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.நாம் தேவையற்ற சீனைப் பொருட்களை வாங்குவதைக் குறைக்க வேண்டும்.
அங்கே பாஞ்சு லகரம் போடலியாம்.
உனக்கு உய்கூரில் இடம் உண்டு
இந்திய மக்களும் இதை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. "வாங்காத ஒரு பொருளின் மதிப்புதான் சேமிப்பு"...
சீனர்கள் புத்திசாலிகள். தேவையில்லாத பொருட்களை வாங்கினால் வெட்டிச் செலவுதான். சேமிப்பு பின்னர் அத்யாவசிய செலவுகளுக்கு உதவும். இதுதான் பணக்கார மனப்பான்மை! வாழ்க!
அங்கே மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் எதை தள்ளுபடியில் கொடுத்தாலும் வரிசையில் நிற்கிறார்கள்.
சீனா தயாரிப்புகள் மிக தரம் குறைவு. ஏராளமான பொருட்கள் தயாரிப்பில் சீனா. போலி பொருட்கள் வாங்கி குவிப்பதை விட சேமிப்பு மேல். இந்தியாவில் சீனா தயாரிப்பு பொருட்கள் ஏராளம்.
மன்மோகன் சோனியா அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தராத காலம். கம்யூனிஸ்ட் நாடக இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்கள் அதிகம் சீனாவில் முதலீடு செய்து இருக்க வேண்டும்.
தற்போது சீனா படைபல, பொருளாதாரபல வல்லரசு. இந்தியாவில் சேமிப்பை கட்டாயம் ஆக்க வேண்டும்.மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது