வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டம் (Tag) கிடங்கு முதல் குளிர்பதன வசதி வரை 2 கோடி ரூபாய் கடனுக்கு வட்டி மானியம்
அறுவடைக்கு பிந்தைய சேமிப்பு, குளிர்பதன வசதி, தரப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட வேளாண் உள்கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை — ஏ.ஐ.எப்., செயல்படுத்தி வருகிறது. தகுதியான திட்டங்களுக்கு வங்கி கடனுடன் வட்டி மானியமும், கடன் உத்தரவாத வசதியும் வழங்கப்படுகிறது.
யாருக்கு?
*விவசாயிகள்
*விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள்
*வேளாண் தொழில்முனைவோர்
*தகுதியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
*கூட்டுறவு சங்கங்கள்
*சுயஉதவி குழுக்கள் மற்றும் பிற தகுதியான அமைப்புகள்
என்ன சலுகை?
*தகுதியான கடனில் 2 கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம்
*அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை வட்டி சலுகை
*தகுதியான கடன்களுக்கு 2 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாத வசதி
*2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்றாலும், வட்டி மானியம் 2 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே பொருந்தும்
எதற்கு பயன்படுத்தலாம்?
கிடங்குகள் மற்றும் சேமிப்பு மையங்கள்
குளிர்பதன கிடங்குகள்
அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை வசதிகள்
தரப்படுத்தல், பேக்கிங் மற்றும் சேகரிப்பு மையங்கள்
முதற்கட்ட பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் வசதிகள்
பிற தகுதியான வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
வேளாண் உள்கட்டமைப்பு திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும்
ஏ.ஐ.எப்., இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்
திட்டத்தில் இணைந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்
திட்ட தகுதி மற்றும் வங்கிக் கடன் ஒப்புதலின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்
திருப்பி செலுத்தும் அவகாசம்
*கடன் திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படலாம்.
* வட்டி மானியம், முதல் கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை கிடைக்கும்.
கவனிக்க
இது நேரடியாக வழங்கப்படும் பண மானியம் அல்ல. வங்கிக் கடனில் 2 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் திட்டமாகும். திட்டத்துக்கு வங்கிக் கடன் ஒப்புதல் அவசியம்.
தொடர்புக்கு
இணையதளம்: agriinfra.dac.gov.in
வங்கி உதவி: திட்டத்தில் இணைந்துள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அணுகலாம்
உள்ளூர் உதவி: மாவட்ட வேளாண் அலுவலகம் / வேளாண் வணிக அலுவலகம் வாயிலாக வழிகாட்டுதல் பெறலாம்
மேலும் விபரங்களுக்கு கியு.ஆர். கோடினை ஸ்கேன் செய்யலாம்.
மேலும்
-
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிவராஜன் சோலைமலை; ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் விஜய்
-
விழுப்புரத்தில் த.வா.க., வினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
-
காலநிலை கல்வி பயிற்சி முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு
-
சேறும் சகதியான சாலையால் குடிகாடு கிராம மக்கள் அவதி
-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் மாவட்டத்தில் பேர் கைது
-
நல்லுாரில் விளையாட்டு மைதானம் அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை