நல்லுாரில் விளையாட்டு மைதானம் அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை
வேப்பூர்: நல்லூரில் விளையாட்டு மைதானத்திற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் விளையாடுவதற்காக பொது விளையாட்டு மைதானம் இல்லாததால், அரசு பள்ளிகளின் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் பள்ளி நேரம் முடிந்து மாலை 5:30 மணி வரை மட்டுமே விளையாட அனுமதிப்பதால், மற்ற நேரங்களில் தங்களின் தனித்திறனை மேம்படுத்த விளையாட முடியாமல் இளைஞர்கள், மாணவர்கள் கடும் சிரமமடைகின்றனர். எனவே, நல்லூரில் விளையாட்டு மைதானத்திற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குவா... குவா
-
24 பேட்டரிகள் திருட்டு மேலும் ஒருவர் கைது
-
காளான் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு
-
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு வேப்பம்பட்டில் சாலை மறியல்
-
ஊதிய முரண்பாடு நீக்க கோரி துறைமுக அதிகாரிகள் போராட்டம்
-
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் விமானி ஸ்மிட் உடன் பங்கேற்க பிரதமருக்கு நெதன்யாகு அழைப்பு
Advertisement
Advertisement